[X] Close

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தாயாரின் இறுதிச் சடங்கு: பிரபலங்கள் அஞ்சலி


singer-sb-balasubramaniam-mother-last-funeral

ஆந்திர மாநிலம் நெல்லூரில் தனது தாயார் சகுந்தலம்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 10:35 am
  • அ+ அ-

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தாயாரின் இறுதிச் சடங்கு ஆந்திர மாநிலம் நெல்லூரில் நேற்று நடைபெற்றது. இதில், சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தாயார் சகுந்தலம்மா (89), கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் காலமானார்.

இதுகுறித்து லண்டனில் இருந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று காலை லண்டனில் இருந்து வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், தனது தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக, எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் சகோதரியும், பாடகியுமான எஸ்.பி. சைலஜா உள்ளிட்ட தமிழ், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் சகுந்தலம்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சகுந்தலம்மாவின் இறுதிச் சடங்கு நெல்லூரில் நேற்று நடந்தது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close