[X] Close

பீமா கோரேகான் வன்முறை வழக்கில் ஆனந்த் டெல்டும்டேவை 12 வரை கைது செய்ய மாட்டோம்: உயர் நீதிமன்றத்தில் போலீஸார் தகவல்


bhima-koregaon-violence-case

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 10:00 am
  • அ+ அ-

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரை அடுத்த பீமா கோரேகான் பகுதியில் கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சமூக ஆர்வலர் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவரது முன்ஜாமீன் மனுவை புனே சிறப்பு நீதிமன்றம் கடந்த 1-ம் தேதி நிராகரித்தது. இதையடுத்து, 2-ம் தேதி அதிகாலையில் அவரை புனே போலீஸார் கைது செய்தனர். ஆனால், உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவை மீறி கைது செய்யப்பட்டதாகக் கூறி அவரை விடுவிக்குமாறு புனே நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, முன்ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆனந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் மிஹிர் தேசாய் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி என்.டபிள்யூ.சாம்ப்ரே முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புனே போலீஸார் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அருணா பாய், வரும் 12-ம் தேதி நள்ளிரவு வரை ஆனந்தை கைது செய்ய மாட்டோம் என தெரிவித்தார். இதையடுத்து 9-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுத் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close