[X] Close

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மூலம் 4 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தகவல்


giriraj-singh

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 09:46 am
  • அ+ அ-

சிறு, குறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில்துறை மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக சிறு, குறு மற்றும் மத்திய தொழில்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

தேசிய சாம்பிள் சர்வே அலுவலகம் 2017-18-ம் ஆண்டில் வேலையில்லாதோர் விகிதம் 2.2 சதவீத அளவுக்கு அதிகரித்ததாகவும் இது 1972-73-ம் ஆண்டில் நிலவிய வேலையில்லாத் திண்டாட்டத்தைவிட அதிகம் என குறிப்பிட்டிருந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2014-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டு வரையான காலத்தில் 18 லட்சம் தொழில் முனைவோர் வங்கி கடன் உத்தரவாத திட்டம் மூலம் கடன் பெற்றுள்ளனர். இந்த அளவானது 2010-14-ம் ஆண்டுகளில் 11 லட்சமாக இருந்தது என்று குறிப்பிட்டார்.

பிரதம மந்திரி வேலை உறுதி திட்டத்தின் மூலம் 2014 முதல் 2018-ம் ஆண்டு வரையான காலத்தில் 20 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று சுட்டிக் காட்டினார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் 7 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. புதிதாக தொழில்முனைவோராக உருவான 3 கோடி பேரால் மேலும் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

20 லட்சம் தொழில் முனைவோர் உருவாகியுள்ள நிலையில் வேலையில்லா திண்டாட்டம் எப்படி அதிகரித்திருக்கும் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

கடந்த 4 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு இத்துறை மூலம் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை உறுதியாகக் கூற முடியும். இது வெறும் வாய்மொழி தகவல் அல்ல. புள்ளி விவரம் மூலம் பெறப்பட்ட உறுதியான தகவல். ஆனால் சிலர் வேண்டுமென்றே சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறித்து தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) உயர்ந்துள்ளது. பண வீக்கம் சரிந்துள்ளது. இப்படியிருக்கையில் வேலையில்லா திண்டாட்டம் மட்டும் எப்படி அதிகரித்திருக்கும் என்று அவர் கேள்வியெழுப்பினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close