[X] Close

பறிமுதல் செய்யப்பட்ட மல்லையாவின் சொத்துகள்; வங்கிகளிடம் ஒப்படைக்க தடை இல்லை: நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்


vijay-mallaya

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 09:45 am
  • அ+ அ-

அமலாக்கத்துறை பறிமுதல் செய்த விஜய் மல்லையாவின் சொத்துகளை கடன் கொடுத்த வங்கிகளிடம் தருவதில் எவ்வித தடையும் இல்லை என்று நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

வங்கிகளிடம் கடன் பெற்று திருப்பித் தராமல் நாட்டை விட்டு இங்கிலாந்துக்கு ஓடிவிட்டார் தொழிலதிபரான விஜய் மல்லையா. இவர்மீது கடன் மோசடி வழக்கு தவிரஅந்நியச் செலாவணி மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. புலனாய்வு அமைப்பு (சிபிஐ), அமலாக்கத்துறை மற்றும் வங்கிகள் ஆகியன தனித்தனியே வழக்குகள் பதிவு செய்துள்ளன.

விஜய் மல்லையாவின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இதைவங்கிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி எஸ்பிஐ தலைமையிலான வங்கி கூட்டமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்த அமலாக்கத்துறை, அதில் கைப்பற்றப்பட்ட சொத்துகளை வங்கிகள் கூட்டமைப்பிடம் ஒப்படைப்பதில் எவ்வித தடையும் கிடையாது. ஆனால் வங்கிகளுக்கு விஜய் மல்லையா எவ்வளவு கடன் தொகையை திருப்பி அளிக்க வேண்டும் என்ற விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. கடன் அளித்த வங்கிகளில் ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தும் பொதுத்துறை வங்கிகளாகும். இதனால் வழங்கப்பட்ட கடன் மக்களின் பணம். இதற்கு பதில் தர வேண்டிய பொறுப்பு வங்கிகளுக்கு உள்ளது. அதுவும் பொதுமக்களின் நலன் கருதி இதை வெளியிட வேண்டும் என்று அந்த பதில் மனுவில் அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்தது.

பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகளிடம் விஜய் மல்லையா பெற்ற கடன் தொகை ரூ. 6,200 கோடியாகும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close