[X] Close

மேற்குவங்கத்தில் தேர்தலின்போது மத்திய படைகளை நிறுத்த ஆணையத்திடம் பாஜக மனு


bjp-petition-to-the-central-bureau-of-investigation

மக்களவைத் தேர்தலை மேற்குவங்கத்தில் நியாயமாக நடத்த நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் பாஜக மூத்த தலைவர்கள் நேற்று மனு அளித்தனர். பின்னர், நிர்மலா சீதாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து வெளியே வருகின்றனர். படம்: பிடிஐ

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 11:20 am
  • அ+ அ-

ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மூத்த தலைவர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, புபேந்திர யாதவ் உள்ளிட்டோர் கொண்ட பாஜக உயர் நிலைக்குழுவினர் நேற்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் மக்களவைத் தேர்தலின்போது மேற்குவங்கத்தில் மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘மேற்குவங்கத்தில் ஜனநாயகம் கேள்விக்குறியாக உள்ளது. மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. மற்ற கட்சிகளை செயல்பட விடாமல் திரிணமூல் காங்கிரஸ் தடுக்கிறது. பாஜகவை கூட்டங்கள் நடத்த விடாமல் தடுக்கின்றனர். மக்களவைத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புவதால் அதுகுறித்து தேர்தல் கமிஷன் கவனத்துக் கொண்டு வந்துள்ளோம்’’ என்றார்.

முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், ‘‘பாஜக தலைவர் அமித் ஷா, உ.பி.முதல்வர் ஆதித்யநாத் வந்த ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கு மாநில அரசு அனுமதிக்கவில்லை. மேற்குவங்கத்தில் நிலவும் மோசமான நிலையை ஆராய வேண்டும் என்றும் திரிணமூல் காங்கிரஸின் ஏஜென்ட்களை போல செயல்படும் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினோம்’’ என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close