[X] Close

லஞ்சம் வாங்க கூடாது என கட்டளையிட்ட தாய்: பிரதமர் நரேந்திர மோடியின் மலரும் நினைவுகள்


modi

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 08:29 am
  • அ+ அ-

‘ஹியூமன்ஸ் ஆப் பாம்பே' என்ற சமூக ஆர்வலர்கள் குழு முக்கிய பிரமுகர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை தங்களது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை அந்த குழுவிடம் கூறியுள்ளார். அவை 5 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே மூன்று பாகங்கள் வெளியாகி உள்ளன.

முதல் பாகத்தில் தந்தையின் டீக் கடையில் உதவியாக இருந்ததை பற்றி மோடி கூறியிருந்தார். இரண்டாவது பாகத்தில் இமயமலைக்கு சென்றுவிட்டு 2 ஆண்டுகள் கழித்து வீடு திரும்பியதை குறிப்பிட்டிருந்தார். மூன்றாவது பாகத்தில் ஐந்து நாட்கள் காட்டில் தனியாக வசித்த அனுபவத்தை நினைவுகூர்ந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியின் 4-வது பாகம் வெளியானது. இதில் அவர் கூறியிருப்பதாவது:

குஜராத்தின் முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்பாக எனது தாயாரை சந்தித்தேன். முதல்வர் பதவி என்றால் என்ன என்பதுகூட எனது தாயாருக்கு தெரியாது. என்னை அவர் ஆரத் தழுவி முத்தமிட்டார்.

லஞ்சம் வாங்க மாட்டேன் என்று எனக்கு ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருக்கிறாய். அந்த பாவத்தை மட்டும் ஒருபோதும் செய்யாதே என்று எனது தாயார் எனக்கு அன்பு கட்டளையிட்டார். அது என் மனதில் ஆழமாகப் பதிந்தது. நான் ஒரு சாதாரண பணியில் இருந்தால்கூட எனது தாயார் மகிழ்ச்சி அடைவார். அவருக்கு பதவிகள் பெரிதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வராக 13 ஆண்டுகள் பணியாற்றிய நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமராகப் பதவியேற்றார். டெல்லியிலிருந்து அரசு முறை பயணமாக குஜராத்தின் அகமதாபாத்துக்கு செல்லும்போதெல்லாம் தனது தாயார் ஹீராபென்னை, அவர் சந்தித்து ஆசி பெறுகிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close