[X] Close

ரூ.6,000 நிதியுதவி பெற விவசாயிகளுக்கு ஆதார் அவசியம்: மத்திய அரசு தகவல்


aadhar-card

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 08:17 am
  • அ+ அ-

விவசாயிகள் ரூ.6,000 நிதி யுதவி பெற ஆதார் அட்டை அவசியம். எனினும் முதல் தவணை நிதியுதவி பெற ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 1-ம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய் யப்பட்டது. இதில் 2 ஹெக்டேர் (5 ஏக் கர்) வரை நிலம் வைத்துள்ள குறு, சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித் தொகை வழங்கப் படும். இந்த உதவித் தொகை 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் 12 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வேளாண் அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் கூறியதாவது:

இரண்டு ஹெக்டேருக்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 12 கோடியே 50 லட்சமாக கணக்கிடப்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகளுக்கு நில சுகாதார அட்டை உள்ளது. அதன் அடிப்படையில் நிதியுதவி திட்டத்துக்கு விவசாயிகள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த திட்டத்துக்காக முதல்கட்டமாக ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் தெரி வித்தார்.

இதுகுறித்து மத்திய பொருளா தார விவகாரங்கள் துறை செய லாளர் சுபாஷ் சந்திரா கர்க் கூறும்போது, "விவசாயிகளுக்கான முதல் தவணை உதவித் தொகை ரூ.2,000 விரைவில் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

பிப்ரவரி அல்லது மார்ச் மாதத் தில் முதல் தவணையாக ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே மத்திய வேளாண் துறை சார்பில் அனைத்து மாநிலங் களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

விவசாயிகள் உதவித் தொகை திட்டத்தில் முதல் தவணை பெற ஆதார் எண் கட்டாயமில்லை. ஆதார் இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, என்ஆர்இஜிஏ அடையாள அட்டை அல்லது வேறு ஏதாவது ஓர் அடையாள அட்டையை விவ சாயிகள் சமர்ப்பிக்கலாம். ஆனால் இரண்டாம் தவணை உதவித் தொகையைப் பெற ஆதார் கட்டாயம். இந்த திட்டத்தில் தவறுகள் நடக்காமல் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close