[X] Close

சாரதா நிதி மோசடி வழக்கில் சிபிஐ நடவடிக்கையை கண்டித்து கொல்கத்தாவில் முதல்வர் மம்தா தர்ணா: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடக்கம் - மேற்குவங்க அரசுக்கு எதிரான சிபிஐ மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை


saratha-mosadi

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிபிஐ நடவடிக்கையை கண்டித்து கொல்கத்தாவில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். போராட்டத்துக்கு நடுவே, நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மம்தா விருதுகளை வழங்கினார். உடன் மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார்| படம்: பிடிஐ

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 08:15 am
  • அ+ அ-

மேற்குவங்கத்தில் கொல்கத்தா காவல் ஆணையருக்கு எதிரான சிபிஐ நடவடிக்கையை கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இந்தப் பிரச்சினை காரணமாக எதிர்க்கட்சி யினர் நேற்று அமளியில் ஈடுபட்ட தால் நாடாளுமன்றம் முடங்கியது. இது தொடர்பாக சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த சாரதா குழுமத்தைச் சேர்ந்த சீட்டு நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர் களின் பல ஆயிரம் கோடி பணத்தை ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அழித்ததாக கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் மீது புகார் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக, சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற னர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அம்மாநில போலீ ஸார், முறையான ஆவணங்கள் இல்லை எனக் கூறி சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்தி சிறைபிடித்து பின்னர் விடுவித்தனர்.

இதனிடையே, சிபிஐ நடவடிக் கையைக் கண்டித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் இரவு தர்ணாவில் ஈடுபட்டார். 2-வது நாளாக நேற்றும் தர்ணா தொடர்ந்தது.

இந்தப் போராட்டத்துக்கு பல் வேறு கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். போராட்டத் துக்கு நடுவே அருகில் உள்ள காவல் சோதனைச் சாவடியில், மம்தா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. காவல் துறை அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கினார். அலுவலக கோப்புகள் சிலவற்றிலும் கையெழுத்திட்டார்.

இந்த சூழ்நிலையில், மக்களவை நேற்று காலையில் கூடியதும் திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப் பினர்கள் மேற்குவங்க பிரச்சி னையை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து பேச மக்களவை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் சவுகதா ராய்க்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அனுமதி வழங்கினார்.

சவுகதா ராய் பேசும்போது, “மேற்குவங்கத்தை அரசியல் ரீதியாக கைப்பற்றுவதற்காக, சிபிஐ அமைப்பை பாஜக தலைமை யிலான மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது” என்றார்.

மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் பேசினர்.

அரசியல் சட்ட சீர்குலைவு

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு நடுவே, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த விவகாரம் குறித்து கூறும்போது, “சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஒத்துழைக்கவில்லை. எனவேதான், சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் போலீ ஸார் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியது முன் எப்போதும் நிகழாத செயல் ஆகும். நாட்டின் கூட்டாட்சி தத்துவத் துக்கு அச்சுறுத்தலாக இந்த சம்பவம் அமைந்துள்ளது. இது மாநிலத்தில் அரசியலமைப்பு சட்டம் சீர்குலைந்திருப்பதையே காட்டுகிறது.

அரசியல் சாசன சட்டப்படி, நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண் டிய அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. எனவே, இந்த சம்பவம் தொடர்பாக மாநில ஆளுநரிடம் அறிக்கை கேட்டுள்ளோம்” என்றார்.

அப்போது, அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவை யின் மையப் பகுதிக்குச் சென்று கூச்சல் போட்டனர். இதனால் அமளி நிலவியதால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதுபோல மாநிலங்களவை நேற்று காலையில் கூடியதும், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் கள் இந்தப் பிரச்சினையை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இத னால் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோதும் இதே நிலை நீடித்ததால், நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

அறிக்கை அனுப்பினார் ஆளுநர்

மத்திய அரசு கேட்டுக்கொண்ட படி, மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து மேற்குவங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி உள்துறை அமைச்சகத்துக்கு தனது அறிக் கையை நேற்று அனுப்பி வைத்ததாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக, சிபிஐ தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை பரிசீலித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதன் மீது நாளை (இன்று) விசா ரணை நடைபெறும் என அறிவித்தது.

8-ம் தேதி வரை போராட்டம்

தர்ணாவின்போது மம்தா பானர்ஜி கூறும்போது, “ஜனநாய கம், அரசியல் சாசனம் மற்றும் நாட்டைப் பாதுகாப்பதற்காகவே இந்தப் போராட்டம். மத்திய அரசு, பாஜக தலைமை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர்தான் இந்தப் போராட்டத்துக்குக் காரணம். இது வரும் 8-ம் தேதி வரை தொடரும். இது அரசியல் ரீதியான போராட்டம் அல்ல. மேடையில் நாட்டைக் காப்போம் என்றுதான் எழுதப்பட்டுள்ளது. எனவே, எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும் பங் கேற்கலாம்” என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close