[X] Close

காலதாமதம் எனும் கலாச்சாரம் எங்களிடம் இல்லை: பிரமதர் மோடி பெருமிதம்


we-ve-left-the-culture-of-delays-behind-says-pm-modi-at-leh-event

  • போத்திராஜ்
  • Posted: 03 Feb, 2019 12:55 pm
  • அ+ அ-

 

லே, ஐஏஎன்எஸ்

ஜம்மு காஷ்மீர் மற்றும் லே பகுதிக்கு இன்று சென்ற பிரதமர் மோடி, மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் காலதாமதம் என்ற கலாச்சாரம் கிடையாது, வேகமாகப் பணி செய்வதைத்தான் நாங்கள் நம்புகிறோம் என பெருமையாகக் குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இன்று பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.அங்கு ரூ.3,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார்.

சிறீநகரில் உள்ள தால் ஏரியைப் பார்வையிடும் பிரதமர் மோடி, அவந்திபோரா பகுதியில் உள்ள விஜயாபூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டினார். ஜம்மு நகரில் ஐஐஎம்சி கல்வி நிறுவனம் தொடங்குவதற்கான அடிக்கல்லையும், லடாக் பகுதியில் முதல் பல்கலைக்கழகம் அமைப்பதற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி வருகையைத் தொடர்ந்து, சிறீநகர் முழுவதும் இன்டர்நெட் இணைப்பு பாதுகாப்பு கருதித் துண்டிக்கப்பட்டது.

லடாக் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, பாஜக தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கினார். லடாக் நகரின் பாரம்பரிய உடை, தலைக்குல்லா அணிந்து மேடையில் தோன்றி பிரதமர் மோடி பேசினார். அவர் கூறுகையில், " துணிச்சலான, வீரமுள்ள மக்களைக் கொண்ட மண் லடாக். கடந்த 1947, 1962 ஆண்டுகளாட்டும், கார்கில் போராகட்டும் வீரமுள்ள லடாக் மக்கள் நாட்டின் இறையான்மைக்கும், ஒற்றுமைக்கும் பாடுபட்டுள்ளனர்.

உங்களின் குளிர்ச்சியான வரவேற்பால் எனக்குக் குளிர் அடிப்பது தெரிகிறது. என்னை ஆசிர்வதிக்கும் இங்குள்ள பெண்களை, தாய்மார்களை வணங்குகிறேன்.

லே பகுதியில் கடந்த ஆண்டு 3 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளனர். அடுத்த வரும் ஆண்டுகளில் இங்குச் சுற்றுலாத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிச் செல்லும். இங்குள்ள மக்களின் நீண்டகால கோரிக்கையான பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம்.

எங்கள் ஆட்சியில் காலதாமதம் என்கிற கலாச்சாரம் இல்லை. கலாச்சாரம் என்ற கலாச்சாரத்தில் இருந்து இந்த தேசம் ஒதுங்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தத் தேசத்தை முழுமையாகக் காலதாமதம் எனும் கலாச்சாரத்தில் இருந்து மீட்டுவிடுவோம். எந்த திட்டம் தொடங்கினாலும், அதைச் சிறப்பாக, விரைவாக, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்போம். வேகமாகப் பணியாற்ற வேண்டும் என்கிற கலாச்சாரத்தில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்.

எங்கள் அரசு இங்குத் தொடங்கி வைத்துள்ள திட்டங்கள் மூலம், இனிவரும் ஆண்டுகளில் லடாக் பகுதியில் வேலைவாய்ப்புகள் பெருகும். 5 புதிய மலைப்பாதையை தொடங்கிவைத்துள்ளதன் மூலம், சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருவார்கள்.

லடாக் சுயாட்சி மலைமேம்பாட்டு கவுன்சில்(எல்ஏஎச்டிசி) இங்குள்ள மக்களுக்கு அதிகமான உரிமைகளை அளித்துள்ளது. இங்குள்ள மக்களின் மேம்பாட்டுக்காக அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close