[X] Close

என் மீது ஆசிட் வீச ஆசம்கான் முயற்சி: நடிகை ஜெயப்பிரதா பரபரப்பு குற்றச்சாட்டு


jayaprada

  • kamadenu
  • Posted: 03 Feb, 2019 10:48 am
  • அ+ அ-

என் மீது ஆசிட் வீச முயற்சி செய்தார் என்று ராம்பூர் தொகுதி எம்எல்ஏ ஆசம் கான் மீது நடிகையும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான ஜெயப்பிரதா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் ஜெயப்பிரதா. கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியின் மூத்த தலைவர் அமர்சிங், ஜெயப்பிரதா ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இருவரும் ராஷ்ட்ரீய லோக் மஞ்ச் என்ற கட்சியைத் தொடங்கி வருகின்றனர்.

இதுகுறித்து அவர் நேற்று மும்பையில் கூறும்போது, “அமர் சிங் எனக்கு காட்பாதர் போன்றவர். அவரை என்றென்றும் மதிக்கிறேன். அவருக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறார்கள். இது தவறு. அவருக்கு நான் ராக்கி கயிறு கட்டிய பிறகும் தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். அவருக்கும் எனக்கும் தவறான உறவு இருப்பதாக பொய்யான கதைகளைக் கூறி வருகின்றனர்.

அவர் உடல் நலமில்லாமல் டயாலிசிஸ் செய்த நிலையில் கூட, எங்கள் இருவர் புகைப்படங்களை ஆபாசமாக மார்ப்பிங் செய்து வெளியிட்டனர். மார்ப்பிங் செய்து வெளியான படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி வைரலானது. இதைக் கேள்விபட்டதும் அழுது புரண்டேன். இனி இந்த உலகத்தில் வாழவே கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இதனால் தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றுவிட்டேன்.

மருத்துவமனையிலிருந்து உடல் நலம் தேறி வந்த பின்னர் அமர்சிங் எனக்கு ஆதரவு தந்தார். எனக்கு பக்கபலமாக நின்றார். அவரையும், என்னையும் சம்பந்தப்படுத்தி பேசுவதால் நான் கவலைப்படவில்லை.

தற்போது வெளியாகியுள்ள மணிகர்னிகா படத்தில் காட்டப்படும் ஜான்சி ராணியைப் போலவே உணர்கிறேன். கடவுள் துர்காவின் அவதாரத்தை பெண்கள் எடுக்க முடியும்.

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், ராம்பூர் தொகுதி எம்எல்ஏவுமான ஆசம் கான் எனக்கு அதிக தொந்தரவுகள் கொடுத்தார். என் மீது ஆசிட் வீசவும் முயற்சி செய்தார்.

எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. நான் வெளியே சென்றால் உயிருடன் வீடு திரும்புவேனா என்பது சந்தேகம். இதை என் தாயாரிடம் கூட தெரிவிக்க முடியவில்லை. எனக்கு யாரும் ஆதரவு தர முன்வரவில்லை.

இந்த சம்பவத்துக்குப் பிறகு கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங், என்னை ஒருமுறை கூட அழைத்துப் பேசவில்லை. இது எனக்கு வருத்தத்தை அளித்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close