[X] Close

சிபிஐ இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி ரிஷி குமார் ஷுக்லா நியமனம்


cbi-director-rishi-kumar-shukla

  • முத்துக்குமார்
  • Posted: 02 Feb, 2019 19:02 pm
  • அ+ அ-

மத்தியப் பிரதேச முன்னாள் டிஜிபியும் ஐபிஎஸ் அதிகாரியுமான ரிஷிகுமார் ஷுக்லா சிபிஐ புலனாய்வு அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 30 பேர் கொண்ட பட்டியலிலிருந்து பிரதமர் தலைமையிலான கமிட்டி ஷுக்லாவைத் தேர்வு செய்துள்ளது.

இவர் பதவிக்காலம் 2 ஆண்டுகள் என்று இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கைத் தெரிவிக்கிறது.  சாகரைச் சேர்ந்த ஷுக்லா தற்போது மத்தியப்பிரதேச போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேஷனின் சேர்மனாகப் பணியாற்றி வருகிறார். 

கடந்த வெள்ளிக்கிழமையன்று சிபிஐ தலைவரை நியமிப்பதில் ஏன் இத்தனை தாமதம் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது.  மேலும் இடைக்கால சிபிஐ இயக்குநர் என்ற ஒரு கருத்தாக்கமே வெறுப்பாக இருக்கிறது என்று கண்டித்தது. 

சிபிஐ இயக்குநர் பதவி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது இதில் போய் இடைக்கால இயக்குநர் என்று நியமிப்பது நல்லதல்ல என்று உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்தது.

இந்நிலையில் இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி குமார் ஷுக்லா 1983 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close