[X] Close

பட்ஜெட் 2019: ரியல் எஸ்டேட் துறைக்கும் சலுகைகள் அறிவிப்பு


budget-2019

  • kamadenu
  • Posted: 02 Feb, 2019 10:18 am
  • அ+ அ-

2019-20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறைக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வீட்டு வாடகை வருமானத்துக்கான வரிச் சலுகை தொகை ரூ.1.8 லட்சத்திலிருந்து ரூ.2.4 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விற்கப்படாமல் இருக்கும் வீடுகள் மூலம் கிடைக்கும் வாடகை வருமானத்துக்கு இரண்டு வருடங்களுக்கு வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு வீட்டின் மீதான மூலதன ஆதாய வரிக்கு அளிக்கப்பட்டுவந்த வரி விலக்கு, இனி இரண்டு வீடுகளுக்கு வழங்கப்பட உள்ளது. மூலதன ஆதாயம் ரூ. 2 கோடிக்குள் இருக்க வேண்டும். மேலும் இந்தச் சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். இரண்டாவதாக வாங்கிய வீட்டிலும் வீட்டு உரிமையாளரே தங்கியிருந்தால் அதற்கு கணக்கிடப்படும் வாடகை வருமானத்துக்கு வரி எதுவும் இல்லை. கிராமப்புற உட்கட்டமைப்பு துறையை ஊக்குவிக்க ரூ. 19,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடு வாங்குபவர்களுக்கு இருக்கும் ஜிஎஸ்டி வரிச்சுமையைக் குறைக்க அமைச்சகங்கள் திட்டமிட்டுவருகின்றன என பியூஷ் கோயல் பட்ஜெட் தாக்கலில் குறிப்பிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close