[X] Close

பட்ஜெட் 2019: மத்திய அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.241 கோடி


budget-2019-highlights

  • kamadenu
  • Posted: 02 Feb, 2019 10:18 am
  • அ+ அ-

அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.241.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகத்துக்கு ரூ.241.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 24 சதவீதம் அதிகம். ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயிற்சிகள் அளிக்க இத்தொகை பயன்படுத்தப்படும்.

டெல்லியில் செயல்படும் தலைமைச் செயலக பயிற்சி மற்றும் மேலாண்மை நிறுவனம் மற்றும் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக பயிற்சி கல்வி நிறுவனம் ஆகியவற்றை மேம்படுத்தவும் அந்த நிறுவனங்களின் பயிற்சித் திட்டங்களுக்கும் இத்தொகை பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close