[X] Close

பட்ஜெட் துளிகள்:  தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு


fm-goyal-announces-full-tax-rebate-for-income-up-to-rs-5-lakh

  • பாரதி ஆனந்த்
  • Posted: 01 Feb, 2019 12:50 pm
  • அ+ அ-

தனிநபர் வருமான வரி உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது ரூ.2.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது. ரூ.2.5 - ரூ.5 லட்சம் வருவாய்க்கு 5% வரியும், ரூ.5-10 லட்சம் வருவாய்க்கு 20% வரியும் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருவாய்க்கு 30% வரியும் விதிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் வர இருப்பதால் மத்திய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பல சலுகைகளை அமைச்சர் அறிவித்தார்.

1. ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ள தனிநபர்கள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை. இதன்மூலம் 3 கோடி நடுத்தர வர்க்க மக்கள் வரிவிலக்கு பெற்று பயனடைவர்.

2. ஏற்கெனவே 80 சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வருமான வரி விலக்கு உள்ளது. இதனையும் சேர்த்து ரூ.6.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி விலக்கு பெறலாம்.

3. தனிநபர் ஆண்டு வருமானத்தில் நிரந்தர கழிவு ரூ.40,000-ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

4. வீட்டு வாடகையாக ஆண்டுக்கு வரி விலக்கு வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இனி வீட்டு வாடகைகாக ஆண்டுக்கு ரூ.2.4 லட்சம் செலுத்துபவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. 

5. வங்கி டெபாசிட்டுகள் மூலம் பெறும் வருமானம் ரூ.40,000-க்கு மேல் இருந்தால் மட்டுமே வரி வசூலிக்கப்படும். தற்போதுவரை ரூ.10000-க்கு மேல் டெபாசிட் வருமானம் இருந்தாலே வரி வசூலிக்கப்பட்டு வந்தது.

6. அஞ்சலகங்களில் டெபாசிட் செய்த தொகைக்கான வரிக்கழிவு  ரூ.40,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close