[X] Close

வேலையின்மை தொடர்பாக வெளியான  புள்ளி விவரங்கள் முழுமையானது அல்ல: நிதி ஆயோக் விளக்கம்


unemployment-data-not-finalised-says-niti-aayog-vice-chairman

  • நெல்லை ஜெனா
  • Posted: 31 Jan, 2019 21:09 pm
  • அ+ அ-

புதுடெல்லி

வேலையின்மை தொடர்பாக வெளியான  புள்ளி விவரங்கள் முழுமையானது அல்ல நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தேசிய சாம்பிள் சர்வே ஆபிஸ்(என்எஸ்எஸ்எஸ்ஓ) கடந்த 2017-18-ம் ஆண்டு வேலையின்மை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வேலையின்மை நிலவரம் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த 1972-73-ம் ஆண்டுக்குப்பின் மிகப்பெரிய உயர்வாகும் என ஊடகங்களில் செய்தி வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறியதாவது:

வேலையின்மை தொடர்பாக வெளியான  புள்ளி விவரங்கள் முழுமையானது அல்ல. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. மேலும் இந்த புள்ளி விவரங்கள் 2011 - 12-ம் ஆண்டு புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுவது தவறானது’’ என தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close