[X] Close

ஆக்கப்பூர்வமாக விவாதம் செய்யுங்கள்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்


pm-urges-lawmakers-to-utilise-parliament-s-budget-session-for-having-constructive-debates

பிரதமர் மோடி

  • போத்திராஜ்
  • Posted: 31 Jan, 2019 11:51 am
  • அ+ அ-

 

புதுடெல்லி, பிடிஐ

இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை எம்.பி.க்கள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு, ஆக்கப்பூர்வ விவாதங்களை நடத்த வேண்டும். நாடாளுமன்ற அவையில் விவாதம் நடத்த விருப்பமில்லாதவர்கள் மீது சமூகத்தில் வெறுப்பை தங்கள் மீதே உருவாக்கி இருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார். 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் நாளை தாக்கல்செய்கிறார். பாஜக தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டாக இது இருக்கும்.

முன்னதாக நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

" இன்று தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த வேண்டி இருப்பதால், அனைத்து எம்.பி.க்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிறிய விஷயங்கள் கூட சாமானிய மக்களுக்குச் சென்று சேர்ந்துவிடுகிறது. ஆதலால், விவாதங்களில் பங்கேற்க விருப்பம் இல்லாத எம்.பி.க்கள், தங்கள் மீதே சமூகத்தில் வெறுப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.

மக்களின் மனநிலையை எம்.பி.க்கள் கவனத்தில் கொண்டும், நாடாளுமன்றம், மக்கள், அரசு ஆகியவற்றின் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த கூட்டத்தொடரை பயன்படுத்தி, விவாதங்களில் பங்கேற்று, இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன்.

எங்களுடைய இந்த அரசு அனைத்து மக்களுக்கானது.ஒட்டுமொத்த உழைப்பு, அனைவருக்குமான வளர்ச்சி என்ற உத்வேகத்தோடு நாடாளுமன்றத்திலும் நாங்கள் பணியாற்றுவோம். அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க ஆர்வமாக இருக்கிறோம் "

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close