[X] Close

மீண்டும் மாயாவதி மீது மோசமான விமர்சனம்: இந்தமுறையும் பாஜக பிரமுகரே அநாகரிகப் பேச்சு


uttar-pradesh-bjp-chief-s-crude-remark-on-mayawati

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 Jan, 2019 15:36 pm
  • அ+ அ-

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி மீது மீண்டும் மிக மோசமான தரக்குறைவான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தமுறையும் பாஜக பிரமுகரே மாயாவதி மீது மோசமான கருத்தை முன்வைத்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் மகேந்திரநாத் பாண்டே, தனது தொகுதியான சண்டோலி தொகுதியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "நான் சமூகவலைதளத்தில் ஒரு பதிவைப் படித்தேன். அதைப் பதிந்த நபர், மாயாவதிக்கு அகிலேஷ் யாதவ் அளித்த சால்வை அவரது தந்தை ஒருகாலத்தில் ஏதோ சொகுசு விடுதியில் மாயாவதி மீதிருந்து நீக்கியதே எனப் பதிவிட்டிருந்தார்" எனப் பேசினார்.

அவரது இந்த பேச்சுக்கு பரவலாக கண்டனங்கள் எழுந்துள்ளன.

கடந்த வாரம் சாதானா சிங் என்ர பாஜக எம்.எல்.ஏ., "மாயாவதி பெண் இனத்துக்கே இழுக்கு. அவர் அதிகாரத்துக்காக தன்மானத்தை விற்றவர். சுயமரியாதை இல்லாதவர்" என்றெல்லாம் தரக்குறைவாக பேசியிருந்தார்.

அந்த சர்ச்சை அடங்குவதற்குள்ளதாகவே மீண்டும் ஒரு மோசமான விமர்சனம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி - சமாஜ்வாதி கூட்டணி அமைந்த நிலையில் தொடர்ந்து மாயாவதியை குறிவைத்து பாஜகவினர் இத்தகைய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைந்தபோது இந்தக் கூட்டணி பிரதமர் மோடிக்கும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கும் தூக்கமில்லா இரவுகளைத் தரும் என்று கூறினார். மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாக்குகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி ஆளும் பாஜகவுக்கு சவாலாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

 

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close