[X] Close

காங்கிரஸுக்கு காட்டிய கண்ணாடியே கட்கரியின் பேச்சு: பாஜகவினர் ஆதரவு


gadkari-has-shown-mirror-to-congress

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Jan, 2019 16:08 pm
  • அ+ அ-

மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல்வாதிகளை மக்கள் விரும்பமாட்டார்கள், என அமைச்சர் கட்கரி கூறியது காங்கிரஸுக்கு காட்டிய கண்ணாடியே என பாஜக கருத்து கூறியிருக்கிறது.

முன்னதாக, மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, "மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல்வாதிகளை மக்கள் விரும்பமாட்டார்கள், மாறாக தண்டித்துவிடுவார்கள்.

அதனால், அரசியல்வாதிகள் 100 சதவீதம் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே மக்களிடம் அளிக்க  வேண்டும். நான் மக்களிடம் எந்தவிதமான பொய்யான வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை. நான் கூறியதை 100 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறேன்" எனத் தெரிவித்தார். இது குறித்து காங்கிரஸ் கட்சி கிண்டலடித்தது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடியை தாக்கிப் பேசியுள்ளதாகத் தெரிவித்தது. இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் பாஜக தலைவர் ஷானவாஸ் ஹுசைன், "கட்கரியின் பேச்சு காங்கிரஸ் கட்சிக்கு காட்டப்பட்ட கண்ணாடி. காங்கிரஸ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தாலேயே 44 மக்களவை எம்.பி.க்களை மட்டுமே இப்போது கொண்டுள்ளது. ஆனால், எங்கள் அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டது" என்றார்.

மற்றொரு பாஜக பிரமுகர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் கூறும்போது, "கட்கரி விமர்சித்தது காங்கிரஸ் கட்சியைத்தான். வறுமையை விரட்டுவோம் என்று போலியாக வாக்குறுதி கூறியது காங்கிரஸ் கட்சிதான்" என விமர்சித்திருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close