[X] Close

உப்புக் காற்று, கடல் உணவு, செல்ஃபி: கோவாவில் சோனியா, ராகுல் காந்தி சுற்றுலா


sonia-rahulgandhi-3-day-visit-to-goa

  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 28 Jan, 2019 15:46 pm
  • அ+ அ-

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரின் மகனும் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி இருவரும் தனிப்பட்ட முறையில் கோவாவுக்குச் சுற்றுலா வந்துள்ளனர்.

3 நாள் பயணமாக கோவா வந்த இருவரும் கடற்கரையை ஒட்டியுள்ள 5 நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளனர். தெற்கு கோவாவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர்கள், அமைதியாக அமர்ந்து மதிய உணவு உண்டனர்.

உணவகத்துக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களுடன் புகைப்படங்களையும் செல்ஃபிகளையும் எடுத்துக்கொண்டார் ராகுல் காந்தி.

இதுதொடர்பான புகைப்படத்தை கோவாவைச் சேர்ந்த பல் மருத்துவர் ரச்னா ஃபெர்னாண்டஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ''நான் என்னுடைய உறவினர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது சோனியாவும் ராகுலும் அமைதியாக உணவு உண்டதைப் பார்த்தேன். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் உடனில்லை.

அவர்களை அணுகி, புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டேன். பில்லைக் கட்டிவிட்டு வருகிறேன் என்றார் ராகுல் காந்தி. தொகையைச் செலுத்திவிட்டு வந்தார். இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அரசியல் என்னும் உலகத்தில் அவர் இருக்கிறார். அதைப் பார்க்க நன்றாக இருக்கிறது. அவரின் வசீகரம் மற்றும் எளிமையான பண்பால் பிரமிப்பு அடைந்தேன்'' என்று தெரிவித்துள்ளார் ரச்னா.

தனிப்பட்ட முறையில் கோவா வந்துள்ள சோனியா, ராகுல் இருவரும் கட்சித் தலைவர்கள் யாரையும் சந்தித்துப் பேசவில்லை. அரசியல் சார்பான நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close