[X] Close

போபால் விஷ வாயுவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதி கோரும் மனு ஏற்பு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு


bhopal-gas-tragedy-sc-to-hear-centre-s-plea-seeking-additional-funds-for-compensating-victims-in-april

உச்ச நீதிமன்றம்

  • பால்நிலவன்
  • Posted: 28 Jan, 2019 14:04 pm
  • அ+ அ-

போபால் விஷ வாயுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ரூ.7,884 கோடி கூடுதல் நிதி கோரியிருந்த மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1984ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் யூனியன் கார்பைடு நிறுவன தொழிற்சாலையிலிருந்து மீத்தேல் ஐசோசையனட் வாயு கசிந்ததில் நகரமெங்கும் விஷவாயு பரவியது. இதனால் 3000த்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்காமல் அந்நிறுவன அதிபர் அமெரிக்காவுக்கு தப்பிச்சென்றார்.

மத்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (திங்கள் கிழமை) இதுகுறித்து கூறியதாவது:

1984 போபால் விஷ வாயுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக யூனியன் கார்பைடு நிறுவனங்களின் வாரிசு நிறுவனங்களிடமிருந்து கூடுதல் நிதியாக ரூ.7,884 கோடி வழங்கப்பட வேண்டுமென கோரும் மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.இம்மனுவை ஏப்ரல் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தெரிவித்தது.

போபால் விஷவாயுவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 470 மில்லியன் அமெரிக்க டாலர்  இழப்பீடாக வழங்கியது. ஆனால் அது உரிய இழப்பீட்டு தொகை அல்ல. எனவே யூனியன் கார்பைட் நிறுவனமும் அதன் இதர நிறுவனங்களும் ரூ.7,844 கோடி கூடுதலாக வழங்கி மக்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டுமென இம்மனுவில் மத்திய அரசு கோரியிருந்தது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close