[X] Close

இனி ஆட்சியர் வாசிப்பார்: திக்கித் திணறிய அமைச்சர்: வைரலாகும் வீடியோ


collector-saab-padhenge-kamal-nath-s-minister-on-republic-day-speech

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Jan, 2019 17:03 pm
  • அ+ அ-

நாடு முழுவதும் 70-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்ட நிலையில் குடியரசு தின உரையை ஆட்சியரை வாசிக்க சொல்லி அமைச்சர் ஒருவர் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் குடியரசு தின விழாவில் கொடியேற்றிய அமைச்சர் இமர்தி தேவி, குடியரசு தின உரையை முழுமையாக வாசிக்காமல் அதனை ஆட்சியர் வாசிப்பார் என்று கூறி பொறுப்பை தட்டிக் கழித்தது சர்ச்சையைக் கிளப்பியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்நிலையில் அமைச்சரின் இந்த செய்கை முதல்வர் கமல்நாத்துக்கு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியிருக்கிறது.

ஆட்சியரும் அமைச்சரின் உத்தரவை ஏற்று உரையை வாசித்திருக்கிறார்.

இது தொடர்பாக ஊடகங்கள் கேள்வி எழுப்ப, "இரண்டு நாட்களாக எனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தாலேயே நான் உரையை வாசிக்கவில்லை. நீங்கள் வேண்டுமானால் எனது மருத்துவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். எப்படியோ அந்த உரையைத்தான் ஆட்சியர் ஒழுங்காக வாசித்துவிட்டாரே" என பதிலளித்தார்.

ஆனால், அவர் அந்த உரையை எழுத்துக்கூட்டி வாசித்து அதனை வாசிக்க இயலாமலேயே ஆட்சியர் கொடுத்தார் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

வீடியோ இணைப்பு:

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close