[X] Close

இறக்குமதி மீதான வரி விதிப்பு அமெரிக்கா மீது பிற நாடுகள் பாரபட்சம் காட்டுகின்றன: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு


taxation-on-imports-other-countries

டொனால்ட் ட்ரம்ப்

  • kamadenu
  • Posted: 26 Jan, 2019 12:39 pm
  • அ+ அ-

வாஷிங்டன்

அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் பிற நாடுகள் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த பரஸ்பர வர்த்தக சட்டம் தொடர்பான நிகழ்வில் பேசிய அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் பிற நாடுகள் ஆதா யம் பெறுகின்றனவே தவிர அமெரிக் காவுக்கு ஆதாயம் கிடைப்பது மிகவும் குறைவுதான் என்று கூறி யுள்ளார்.

உதாரணமாக அமெரிக்கா விலிருந்து இறக்குமதி செய்யப் படும் மோட்டார் வாகனங்களுக் கான வரியை இந்தியா பாதியாகக் குறைக்கும் முடிவை கடந்த வருடம் எடுத்தது. வெறும் இரண்டு நிமிட பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டது. தற்போது இந்தியா- அமெரிக்கா இடையிலான மோட் டார் வாகன இறக்குமதி வரி 50%- 2.4% என்ற நிலையில் உள் ளது.

ஆனால், அதே இந்தியா ஒயின், விஸ்கி போன்றவற்றுக்கான வரியை அதிகமாக வைத்துள்ளது. உதாரணமாக விஸ்கிக்கு இந்தியா 150 சதவீத வரியை விதித்துள்ளது. ஆனால், அமெரிக்காவில் இதற்கு எந்த வரியும் இல்லை என்றார்.

மேலும், பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதித்து ஆதாயம் அடைகின்றன. அதுமட்டுமல்லாமல் பிற நாடுகள் நாம் வர்த்தகம் செய்ய முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகளையும் வைத்துள்ளன. நம்முடைய பொருட்களை விற்க முடியாத நிலை ஏற்படுகிறது. இது நியாய மற்றது என்று கூறினார். இந்தப் போக்கு காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது என்று குறிப் பிட்டார்.

மேலும், பல நாடுகள் நட்பு நாடாக உள்ளன, பல நாடுகள் கூட்டணி நாடாக உள்ளன. சில நேரங்களில் கூட்டணியில் இல்லாத நாடுகளைக் காட்டிலும் கூட்டணியில் உள்ள நாடுகள் நம்மிடமிருந்து அதிக ஆதாயமடைகின்றன. இதற்கெல்லாம் பரஸ்பர வர்த்தக சட்டத்தின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித் தார்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விதிப்பு உயர்த்தப்படும் என்று ட்ரம்ப் மிரட்டிய பிறகே அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரியைப் பாதியாகக் குறைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close