[X] Close

நோய்வாய்ப்பட்ட மனைவியைக் கொன்று விட்டால் இறுதிச் சடங்கு செய்ய விடுப்பு அளிப்பீர்களா? கணவனின் விரக்தி


  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 25 Jan, 2019 17:51 pm
  • அ+ அ-

மத்திய பிஹாரின் கிராமப் பகுதியில் உள்ள வங்கியில் பணிபுரிபவர் முன்னா பிரசாத். அவரின் மனைவி ஓராண்டுக்கும் மேலாக தீவிர சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். வாரத்துக்கு இரண்டு முறை அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டி இருந்தது.

 

மனைவியைக் கவனித்துக்கொள்வதற்காக அலுவலகத்தில் விடுமுறை கேட்டார் முன்னா. ஆனால் பல்வேறு காரணங்களைக் கூறி, அவரின் விடுமுறை மறுக்கப்பட்டது. தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்தும் அலுவலகத்தில் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

 

சிறப்பு விடுமுறை

இதனால் எரிச்சலடைந்த முன்னா, தன்னுடைய மனைவியைக் கொலை செய்தாலாவது அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய இரண்டு நாட்கள் விடுமுறை தருவீர்களா என்று கேட்டிருந்தார்.

 

அந்தக் கடிதத்தின் நகல்களை இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்கும் அனுப்பி இருந்தார். இந்த செய்தி வைரலானதும் வங்கி, அவருக்கு விடுமுறை அளித்தது.

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னா, ''நான் போனில் அழைத்தால் என்னுடைய உயரதிகாரிகள் போனை எடுப்பதைத் தொடர்ந்து தவிர்த்தனர். ஆனாலும் சலிக்காமல் தொடர்ந்து முயற்சித்தேன். கடைசியாக என்னுடைய போனை எடுத்த பெண் அதிகாரி ஒருவர், இறுதிச் சடங்குகளைச் செய்ய மட்டுமே விடுமுறை கிடைக்கும் என்றார்.

 

இதனால் உடனடியாக நான் மனைவியைக் கொன்று, இறுதிச் சடங்கு செய்ய இரண்டு நாள் விடுமுறை வேண்டு என்று கோரினேன்'' என்றார்.

 

இந்தியாவில் இதுபோன்ற விநோத காரணங்களைக் கூறி விடுமுறை கேட்பதொன்றும் புதிதில்லை. கடந்த ஆண்டு, உத்தரப் பிரதேசத்தின் மஹோபா கோத்வாலி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் சோம் சிங், தன்னுடைய விடுமுறை வேண்டுகோள்கள் மறுக்கப்பட்டதால், தன்னுடைய ''குடும்பத்தைப் பெருக்குவதற்காக'' விடுமுறை வேண்டும் என்று கேட்டிருந்தார்.

 

அவரின் கடிதம் வைரலானதை அடுத்து, அதிகாரிகள் அவருக்கு 45 நாட்கள் விடுமுறை அளித்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close