[X] Close

ரூ.3,250 கோடி முறைகேடாக கடன் கொடுத்த ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் சந்தா கொச்சார் மீது சிபிஐ வழக்கு


icici-bank

சந்தா கொச்சார்.

  • kamadenu
  • Posted: 25 Jan, 2019 16:22 pm
  • அ+ அ-

புதுடெல்லி

ஐசிஐசிஐ வங்கியின் தலைவராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்தவர் சந்தா கொச்சார். இவரது கணவர் தீபக் கொச் சாருக்கு சொந்தமான நுபவர் நிறுவனத்தில் வீடியோகான் நிறு வனம் பல கோடி ரூபாய் முதலீடு செய்தது. இதற்கு கைமாறாக வீடியோகான் நிறுவனத்துக்கு விதி முறைகளை மீறி ரூ.3,250 கோடியை ஐசிஐசிஐ வங்கி மூலம் சந்தா கொச்சார் கடந்த 2012-ம் ஆண்டு கடன் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. சந்தா கொச்சார், அவரது கணவர் தீபக் கொச்சார், வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோரிடம் விசாரணை நடத் தியது. இந்நிலையில், சந்தா கொச் சார் உட்பட 3 பேர் மீது சிபிஐ நேற்று முறைப்படி வழக்கு பதிவு செய்தது. நுபவர் நிறுவனம், வீடியோகான் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை, அவுரங்காபாத் ஆகிய இடங்களில் உள்ள நுபவர் நிறுவனம், வீடியோகான் நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close