[X] Close

சபரிமலை விவகாரத்தில் கருத்து தெரிவித்த தேசியவிருது பெற்ற இயக்குநர் மீது சாணியை கரைத்து ஊற்றித் தாக்குதல்: பினராயி விஜயன் கண்டனம்


national-award-winning-director-priyanandanan-attacked-outside-his-house

இயக்குநர் பிரியாநந்தன்

  • போத்திராஜ்
  • Posted: 25 Jan, 2019 15:18 pm
  • அ+ அ-

 

திருச்சூர், பிடிஐ

தேசிய விருது பெற்ற மலையாளத் திரைப்பட இயக்குநர் டி.ஆர். பிரியாநந்தன் மீது அடையாளம் தெரியாத நபர் சாணியைக் கரைத்து ஊற்றி, தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பினார்.

சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு ஆதரவாக சமூகஊடகங்களில் கருத்து தெரிவித்து வந்ததையடுத்து, அவர் மீது இந்துவலது சாரி அமைப்புகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மலையாளத் திரைப்பட இயக்குநர் டி.ஆர். பிரியாநந்தன். இவர் மலையாளத்தில் எடுத்த புலிஜென்மம் படம் கடந்த 2006-ம் ஆண்டு தேசிய விருது பெற்றது. அதுமட்டுமல்லாமல், நெய்துகாரன், சூபி பரஞ்ச கதா, பக்தாஜனங்களுடே ஸ்ரதாக்கு, ஒரு யாத்ரயில், ஜென் நின்னூடு கூடியுண்டு, பதிராக்காலம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். சைலன்ஸர் எனும் திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார்.

முற்போக்குக் கருத்துக்களையும், சிந்தனைகளையும் உடைய இயக்குநர் பிரியாநந்தன் சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ய ஆதரவு அளித்துவந்தார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து ஆதரவான கருத்துக்களைப் பதிவிட்டுவந்தார். இதற்கு ஆர்எஸ்எஸ், பாஜகவைச் சேர்ந்த சிலர் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டும், அச்சுறுத்தல் விடுக்கப்பட்டும் வந்தது.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் திருச்சூரில் உள்ள வலச்சிரா பகுதியில் தனது வீட்டைவிட்டு நடை பயிற்சிக்காக காலை 9மணிக்கு பிரியாநந்தன் வெளியே வந்தார். அப்போது பிரியாநந்தன் அருகே சென்ற ஒருவர் அவரை திடீரென தாக்கி, அவர் மீது சாணிக் கரைசலை ஊற்றிவி்ட்டு தப்பினார்.

இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து இயக்குநர் பிரியாநந்தனிடம் விசாரணை நடத்தினார்கள்.

இது குறித்து இயக்குநர் பிரியாநந்தன் நிருபர்களிடம் கூறுகையில், “ நான் வழக்கமாகக் காலை 7 மணிக்கு நடைப்பயிற்சிக்குச் செல்வேன், இன்று காலை 9 மணிக்குப் புறப்பட்டேன்.

அப்போது, தனியாக நின்றிருந்த ஒருவர் என்னை நோக்கிவந்து என்னை பிரியாநந்தனா எனக் கேட்டார். நான் ஆம் என்றவுடன் என்னைத் திடீரென தாக்கிவிட்டு, சாணிக் கரைசலை ஊற்றிவிட்டார்.

இந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் இருப்பார்கள் என சந்தேகிக்கிறேன். என் சந்தினைகளை பலவீனப்படுத்தவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீஸிடம் புகார் அளித்துள்ளேன் “ எனத் தெரிவித்தார்.

இயக்குநர் பிரியாநந்தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் ஆர்எஸ்எஸ், சங்பரிவார் திட்டமிட்டு நடத்தியுள்ளார்கள் எனக் குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்த அறிக்கையில், “ நாட்டில் சமூக அமைதியையும், மதச்சார்பின்மையையும் காக்கும் அறிவார்ந்தவர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மீது தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிந்தனையாளர்களின் சுதந்திரமான சிந்தனைக்கு எதிராகச் செயல்பட நினைப்பவர்களை அரசு அனுமதிக்காது. கருத்து சுதந்திரம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும், இதுபோன்ற சம்பவங்களை எந்தவிலை கொடுத்தேனும் தடுக்கும் “ எனத் தெரிவித்துள்ளார்.

திருச்சூர் போலீஸ் ஐஜி எம்.ஆர். அஜித் குமார் தி இந்துவிடம்(ஆங்கிலம்) கூறுகையில், “ இந்தச் சம்பவத்தை போலஸார் தீவிரமாகப் பார்க்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக புலன்விசாரணை நடத்திவருகிறோம், விரைவில், சம்பவத்தையார் செய்தது, பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்பதைக் கண்டுபிடிப்போம்.

சபரிமலை குறித்து கருத்துக்களைத் தெரிவித்ததால், சங்பரிவாரைச் சேர்ந்த ஒருவர் இயக்குநருக்குக் கொலைமிரட்டல் விடுத்து அந்தப் பகுதியை நீக்கக் கோரியுள்ளார் “ எனத் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close