[X] Close

'சுற்றுலாவின் போது மதுபானங்களை எடுத்துச் செல்லுங்கள்'- மாணவர்களுக்கு கல்லூரி பெண் முதல்வரின் உத்தரவால் சர்ச்சை


take-alcoholic-beverages-during-the-tour

சித்தரிப்புப் படம்

  • kamadenu
  • Posted: 25 Jan, 2019 12:21 pm
  • அ+ அ-

மும்பையில் உள்ள சட்டக் கல்லூரி முதல்வர், தன்னுடைய மாணவர்கள் சுற்றுலா செல்லும்போது மதுபானங்களை எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டதாகக் கூறப்படுவதால் சர்ச்சை எழுந்துள்ளது.

மும்பையில் மாலத் கண்டீலி கல்வியியல் சங்க சட்டக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி மாணவர்கள் டெல்லி மற்றும் வட இந்தியாவுக்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்தனர். அப்போது கல்லூரியின் முதல்வர் வந்தனா துபே, மாணவர்களை அழைத்துப் பேசியுள்ளார்.

சுற்றுலா செல்லும்முன் சில நெறிகாட்டுதல்களை அளித்துள்ளார். அப்போது மாணவர்களிடம் குளிரான சூழ்நிலையைக் கையாள  மதுபானங்களை எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவ சட்ட கவுன்சில், மும்பை பல்கலைக்கழகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது.

''அதிகாரிகள் மது பானங்களை எடுத்துச்செல்லக் கட்டாயப்படுத்தியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மது அருந்துவது குறித்து என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை'' என்கிறார் சந்திப்பின்போது உடனிருந்த மாணவி ஒருவர்.

இதுகுறித்து மாணவ சட்ட கவுன்சில் தலைவர் சச்சின் பவார் கூறும்போது, ''இதுபற்றி விசாரிக்கக் கோரி மும்பை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.

மாணவர்கள் மதுபானங்களை வைத்திருப்பதைக் காவல்துறையினர் பார்த்தால், வழக்கு பதிவு செய்யக்கூடும். அத்தகைய சம்பவங்கள் நடந்தால், யார் பொறுப்பேற்பர்?'' என்று கேள்வி எழுப்புகிறார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை முதல்வர் வந்தனா மறுத்துள்ளார். ''மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வது பாடத்திட்டத்தின் பகுதிகளில் ஒன்று. மதுபானம் குறித்து எந்த உத்தரவு அவர்களுக்குப் பிறப்பிக்கப் படவில்லை.

குளிருக்கு ஏற்ற ஆடைகள், மருந்துகள் மற்ற தேவையான பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்லுமாறு கூறினோம். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை'' என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close