[X] Close

வீட்டு கரண்ட் பில் ரூ.23 கோடி: அதிர்ந்து போன மனிதர் புகார்


current-bill-23-crore

  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 23 Jan, 2019 18:04 pm
  • அ+ அ-

உத்தரப் பிரதேசத்தில் அப்துல் பாசித் என்பவரின் வீட்டு கரண்ட் பில் ரூ.23 கோடி என்று வந்ததைக் கண்டு அதிர்ந்துபோனார். கன்னூஜ் பகுதியில் உள்ள 2 கிலோவாட்ஸ் இணைப்பு கொண்ட அவரின் வீட்டில் 178 யூனிட்டுகள் ஓடியுள்ளதாக மின்சார வாரியத்தின் ரீடிங் காண்பித்தது.

 

குறிப்பாக 23 கோடியே 67 லட்சத்து 71 ஆயிரத்து 524 ரூபாயைக் கட்ட வேண்டும் என்று பில் வந்திருந்தது. இதனால் அதிர்ச்சியான அப்துல், மின்சார வாரிய அதிகாரிகளை நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.

 

ரீடிங் மீட்டரில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு, இவ்வாறு நடந்திருக்கலாம் என்றும் அது சரிசெய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவு கணக்கிடப்படும் எனவும் அதுவரை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் இருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து 'ஏஎன்ஐ' நிறுவனத்திடம் பேசிய அப்துல், ''ஒட்டுமொத்த உத்தரப் பிரதேச மாநிலத்துக்கான மின்சாரக்  கட்டணம் எனக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

 

என்னுடைய வாழ்க்கை முழுவதும் சம்பாதித்தால் கூட என்னால் இத்தொகையைக் கட்ட முடியாது'' என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close