[X] Close

டேட்டா ஆதிக்கத்துக்கு எதிராக நடவடிக்கை: பிரதமரிடம் முகேஷ் அம்பானி வலியுறுத்தல்


mukesh-ambani-emphasis

முகேஷ் அம்பானி: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 19 Jan, 2019 11:41 am
  • அ+ அ-

தரவுகளை (டேட்டா) கைப்பற்றி பிறர் பயன்படுத்த முடியாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்கள் வணிக நோக்கில் தரவுகளை கைப்பற்றி பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியர்களைப் பற்றியதகவல் தொகுப்புகள் முழுவதும் இந்தியர்களுக்குத்தான் சொந்தம்என்ற நிலையை உருவாக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மகாத்மா காந்தி அந்நியர்களுக்கு எதிராக காலனி ஆதிக்கத்தை ஒழிக்க ஒரு இயக்கத்தையே தொடங்கினார். அதைப் போல இப்போது டேட்டா எனப்படும் தரவுகள் மூலம் நடைபெறும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது உடனடி அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

காலனி ஆதிக்கத்துக்கு எதிராககாந்தி உருவாக்கிய இயக்கத்தில் குஜராத்தின் பங்களிப்பு அபரிமிதமானது. இன்றைய காலகட்டத்தில் தரவு ஆதிக்கத்துக்கு எதிராக ஒரு புதிய இயக்கத்தை உருவாக்கி அதை எதிர்க்க வேண்டும் என்று குஜராத் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள வைப்ரன்ட் குஜராத் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் பேசுகையில் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் தரவுகள்தான் மிகப் பெரிய சொத்து. அந்த வகையில் இந்தியர்கள் பற்றிய தரவுகள் (டேட்டா) இந்தியர்களுக்கே சொந்தம். அதை எந்தஒரு நிறுவனமும் உரிமை கோரக்கூடாது, குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்கள் சொந்தம் கொண்டாட அனுமதிக்கக் கூடாது என்றார்.

இந்தியாவில் தற்போது தரவுகள் சார்ந்த புரட்சி ஏற்பட்டுள்ளது.

இந்தியர்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் இந்தியாவுக்கே திரும்ப வேண்டும். அதாவது இந்தியர்களின் சொத்து இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்றார்.

இந்த உலகமே பிரதமர் மோடியை செயல் வீரர் என்கிறது, ஆனால் உங்களது லட்சியமான டிஜிட்டல் இந்தியா இலக்கை எட்டுவீர்கள் என்பதில் தனக்கு சந்தேகம் கிடையாது என்றார் அம்பானி.

ரூ. 3 லட்சம் கோடி முதலீடுஅடுத்த 10 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் தனது நிறுவனம் ரூ. 3 லட்சம் கோடியை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக முகேஷ் அம்பானி குறிப்பிட்டார். எரிசக்தி, பெட்ரோ ரசாயனம் மற்றும் டிஜிட்டல் தொழிலில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

குஜராத் மாநிலம்தான் ரிலையன்ஸூக்கு பிறந்த பூமி, பணி புரியும் பூமி.

அந்த வகையில் இந்த மாநிலத்துக்குத்தான் எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும். குஜராத் மாநிலத்தில் இதுவரையில் ரூ. 3லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல 10 லட்சம்வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த முதலீட்டு அளவை இரட்டிப்பாக்குவதோடு இரு மடங்கு வேலை வாய்ப்பை (20 லட்சம்பேருக்கு) உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். 5ஜிதொழில்நுட்பத்துக்கு ஜியோ தயாராக உள்ளது என்றார். சர்வதேச அளவுக்கு தீன்தயாளர் பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்த ரூ. 150கோடியை ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கும் என்று முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close