[X] Close

விவசாயிகளுக்கு விரைவில் மிகப்பெரிய சலுகைகள்: பாஜக தலைவர் அறிவிப்பு


large-concessions-to-farmers-soon

  • kamadenu
  • Posted: 19 Jan, 2019 11:34 am
  • அ+ அ-

விவசாயிகளுக்காக மத்திய அரசு விரைவில் மிகப்பெரிய சலுகைகளை அறிவிக்கும் என்று பாஜக விவசாய அணித் தலைவர் விரேந்திர சிங் மஸ்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வேளாண் கடனை தள்ளுபடி செய்வதால் விவசாயிகள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. எனவே விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுத்துள்ளது. விரைவில் மிகப்பெரிய சலுகை திட்டங்கள் அறிவிக்கப்படும். எனினும் அவை குறித்த விவரங்களை இப்போது வெளியிட முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வரும் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதை பாஜக விவசாய அணித் தலைவர் உறுதி செய்துள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close