[X] Close

மார்ச்சில் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு?- தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை


lok-sabha-election-date-announcement-in-march

மக்களவைத் தேர்தல் தொடர்பாக பிஹார் தலைநகர் பாட்னாவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா (இடமிருந்து 3-வது) படம்: பிடிஐ

  • kamadenu
  • Posted: 19 Jan, 2019 11:31 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலுக்கான தேதியை, வரும் மார்ச் மாதத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போதைய நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 3-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதனை முன்னிட்டு, புதிய மக்களவைக்கு பொதுத் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்ட பிறகு, 2019-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் தேதி வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களையும் ஒருங்கே நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் தொடர்பாக பிஹார் தலைநகர் பாட்னாவில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்டோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.- பிடிஐ

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close