[X] Close

டெல்லியில் 450 விமான சேவை பாதிப்பு


450-flights

  • kamadenu
  • Posted: 19 Jan, 2019 11:25 am
  • அ+ அ-

டெல்லி விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக 450 விமான சேவை பாதிக்கப்பட்டது.

நாடு முழுவதும் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக அதிகாலை வேளைகளில் பனி அதிகமாக பெய்து வருகிறது. இதனால் முக்கிய நகரங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக டெல்லியில் அதிக அளவில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் 450 விமான சேவை பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. காலை 5.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை பனிமூட்டம் இருந்தது.

இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு விமானங்கள் வர முடியாமலும், புறப்பட முடியாமலும் பிரச்சினை ஏற்பட்டது. பயணிகள் தகுந்த நேரத்தில் புறப்பட்ட முடியாமல் பாதிக்கப்பட்டனர் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லிக்கு வந்த சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து டெல்லி வந்த விமானம், கொல்கத்தாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதைப் போலவே பாங்காக், துபாய், குவாஹாட்டி, மஸ்கட்டிலிருந்து வந்த விமானங்கள் ஜெய்ப்பூருக்கு அனுப்பப்பட்டன.

இதனிடையே கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 28 ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. 36 ரயில்களின் வருகை, புறப்பாடு தாமதமானது என்று ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதைப் போலவே சாலைப் போக்குவரத்தும் அதிக அளவில் பாதிகக்ப்பட்டதாகத் தெரியவந்துள்ளது

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close