[X] Close

ஏழுமலையானை தரிசிக்க 18 மணி நேரம் காத்திருப்பு 


in-tirupati-peoples-waiting-18-hours-for-swamy-dharisanam

திருப்பதி திருமலை கோயில்: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 17 Jan, 2019 11:31 am
  • அ+ அ-

பொங்கல் விடுமுறையை யொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த சனிக்கிழமை முதல், விடுமுறை என்பதால், நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையை முடித்துக் கொண்டு, ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திருமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால், நேற்று காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் சர்வ தரிசனத்திற்கு 18 மணி நேரம் ஆனது. ரூ. 300 சிறப்பு தரிசனம் மூலம் சென்றவர்கள் 6 மணி நேரத்தில் சுவாமியை தரிசனம் செய்தனர். திவ்ய தரிசனத்திற்கு 4 மணி நேரம் ஆனது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close