[X] Close

கேஜ்ரிவால் மகளைக் கடத்தப்போவதாக மிரட்டிய நபர் கைது


one-detained-over-threat-to-kidnap-delhi-chief-minister-arvind-kejriwal-s-daughter

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Jan, 2019 19:34 pm
  • அ+ அ-

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மகளை கடத்தப்போவதாக மிரட்டிய நபர் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜனவரி 9-ம் தேதியன்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மெயில் ஒன்றில் அவரது மகளை கடத்தப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

மகளைக் காப்பாற்ற என்ன செய்ய முடியுமோ அது செய்து கொள்ளவும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கேஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் பிஹார் மாநில சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விகாஸ் என்பவர் சிக்கினார்.

டெல்லி போலீஸிம் சைபர் க்ரைம் பிரிவினர் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விகாஸ் உத்தரப் பிரதேசத்தின் ரே பரேலி மாவட்டத்தில் உள்ள தனது சகோதரியை சந்திக்கச் சென்றபோது போலீஸார் அவரை சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

விகாஸ் அரசு வேலையில் சேர்வதற்காக ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுதி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த நபர் டெல்லி கொண்டு செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close