[X] Close

பெரும்பான்மை பலம் கொண்ட பிரதமரால்தான் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்: ஜேட்லி


india-needs-a-decisive-pm-not-maverick-leadership-arun-jaitley

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Jan, 2019 18:57 pm
  • அ+ அ-

பெரும்பான்மை பலம் கொண்ட பிரதமரால்தான் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அருண் ஜேட்லி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "2014-ல் மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ஓர் ஆட்சி அமைந்தது. அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது.

ஆனால், அதைவிடுத்து முழுமையடாத கூட்டணியாக உருவாகாத அதன் நீடிப்பத் தன்மையே சந்தேகமாக இருக்கும் கட்சிகளின் ஒருங்கிணைப்பு எப்படி ஸ்திரமான பொருளாதாரத்துக்கு உதவும்.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் ஜிடிபி (ஒட்டுமொத்த பொருளாதார விகிதம்) 7.3% என்றளவில் சீராக இருக்கிறது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 9.4% என்றளவில் விட்டுச் செல்லப்பட்ட பணவீக்கம் 2014-ல் இருந்து தொடர் கண்காணிப்பில் இருக்கிறது.

பிரதமர் மோடி ஆட்சியை ஏற்கும்போது இந்தியா உலகளவில் 10-வது பொருளாதார வல்லரசாக இருந்தது. தற்போது 5 மற்றும் 6-ம் இடங்களில் இருக்கும் பிரிட்டன் மற்றும் பிரான்ஸுடம் மிக நெருக்கமான போட்டியில் நாம் இருக்கிறோம்.

இந்த முன்னேற்றம் திட்டமிட்டபடி தொடர வேண்டுமானால் பெரும்பான்மை பலம் கொண்ட பிரதமரே மத்தியில் அமைய வேண்டும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைமையில் கட்சிகள் ஒன்றுபட்டு வரும் நிலையில் அதை மறைமுகமாக சுட்டிக்காட்டி ஜேட்லி இந்தப் பதிவை பகிர்ந்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close