[X] Close

மக்களவைத் தேர்தலில் 2 சித்தாந்தங்களுக்கிடையே போட்டி; எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு கொள்கை, தலைவர் இல்லை: பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் அமித் ஷா குற்றச்சாட்டு; தென்னிந்தியாவிலும் ஆட்சிக்கு வருவோம் என உறுதி


competition-between-2-ideologies-in-lok-sabha-election

பாஜகவின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து கவுரவித்தனர். உடன் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர். படம்: சந்தீப் சக்சேனா

  • kamadenu
  • Posted: 12 Jan, 2019 10:27 am
  • அ+ அ-

எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு கொள்கையோ, தலைவரோ இல்லை என பாஜக தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டி உள்ளார். வரும் மக்களவைத் தேர்தல் 2 சித்தாந்தங் களுக்கிடையிலான போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் உள் ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு மெகா கூட்டணி அமைக்க முயன்று வருகின்றன. அதேநேரம், இந்தத் தேர்த லில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பாஜகவின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தலைவர் அமித் ஷா, எல்.கே.அத்வானி உள்ளிட்ட மூத்த தலை வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இதில் அமித் ஷா சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது. அதன் பிறகு, ஊழல் ஒழிப்பு, ஏழைகள் நலன், நாட்டின் பாதுகாப்பு ஆகிய வற்றை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பில் உயர்சாதி (பொதுப் பிரிவு) ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவு நனவாகி உள்ளது.

ஆனால், ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்று வெளியில் உள்ள காங்கிரஸ் தலைவர், ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு களை கூறி வருகிறார். ஆனால் மக்கள் இதை நம்ப மாட்டார்கள். அவர்கள் இவரைவிட புத்திசாலிகள்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக் கிறது. ஏனென்றால் நாட்டின் பாதுகாப்பு பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பது தான் அவர்களுடைய நோக்கம்.

வரும் மக்களவை பொதுத் தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டியாக இருக்கும். குறிப்பாக 3-வது பானிபட் போருக்கு இணையானதாக இது விளங்கும். கலாச்சார தேசியவாதமும் ஏழைகளின் முன்னேற்றமும்தான் பாஜக வின் சித்தாந்தம். ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் சித்தாந்தமாக உள்ளது. அவர்களுக்கு தலைவரோ, கொள்கையோ தொலை நோக்கு திட்டமோ எதுவும் இல்லை. எதிர்க் கட்சிகளின் மெகா கூட்டணி தேசிய அள வில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

எனவே, கடந்த தேர்தலைப் போல, வரும் தேர்தலிலும் பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என நம்பு கிறேன். உத்தரபிரதேசத்தில் கடந்த தேர்தலில் வென்றதைவிட கூடுதல் தொகுதியில் பாஜக வெற்றி பெறும். அங்கு எதிரும் புதிருமாக இருந்த இரு தலைவர்கள் பாஜக மீதான அச்சத்தில் கூட்டணி சேர்ந்துள்ளனர். ஆனாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது.

கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, நாட்டில் உள்ள 6 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்றது. ஆனால் இப்போது 16 மாநி லங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் தென்னிந்தியாவிலும் பாஜக ஆட்சி மலரும். குறிப்பாக கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வரும்.

அயோத்தியில் ராமர் கோயில்

நமது கட்சியைச் சேர்ந்த பிரதமர் மோடி உலக அளவில் பிரபலமான தலைவராக விளங்குகிறார். அவரை மீண்டும் பிரதமராக்க நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அவரால் மட்டுமே நிலையான, வலிமையான நிர்வாகத்தை வழங்க முடியும். வேறு யாராலும் முடியாது.

அயோத்தியில் விரைவாக ராமர் கோயில் கட்ட வேண்டும் என பாஜக விரும்புகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தில் நிலுவையில் உள்ள வழக்கு இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. ஆனால், இந்த வழக்கை விரைந்து முடிக்க காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close