[X] Close

பிப்ரவரி 1-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்?


interim-budget-on-february-1

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Jan, 2019 16:36 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

பிப்ரவரி 1-ம் தேதி மத்தியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரம் தெரிவிக்கிறது. 

டெல்லியில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் (CCPA) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
முழுமையானா பட்ஜெட் புதிய அரசு அமைந்த பின்னர் தாக்கல் செய்யப்படும்.

பாஜக ஆட்சி அமைந்த பின்னர் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.

ஜனவரி 31 முதல் பிப்ரவரி  13 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த முறை காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நிதியமைச்சர் சிதம்பரம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதன் பின்னர் பாஜக ஆட்சி அமைந்தவுடன் அருண் ஜேட்லி ஜூலை மாதத்தில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close