[X] Close

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த சிபிஐ விசாரணை; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு: 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு


cbi-investigation-into-thoothukudi-shootings

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 18:03 pm
  • அ+ அ-

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் 100 நாட்களுக்கு மேலாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த மே 22-ம் தேதி போராட்டக்காரர்கள் மீது  போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்13 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

ஆனால், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி மாற்றி உத்தரவிட்டது.

அதேபோல துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவலர்கள் மீது வழக்குப் பதியவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் வழக்கை தமிழக அரசே தொடர்ந்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது.

அதேபோன்று தூப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டதற்கும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

ஆனால் கடந்தமுறை விசாரணையின்போது, சிபிஐ விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்ததோடு,  இந்த மனு மீது சிபிஐ உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள்  பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க எதிர்மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது , அதனை ஏற்று 2 வார கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close