[X] Close

பெங்களூருவில் புழுதிப் புயலுடன் ஆலங்கட்டி மழை: பெரிய வெள்ளியில் பெய்ததால் மக்கள்  பிரார்த்தனை


bangalore-rain-today

  • நாகப்பன்
  • Posted: 31 Mar, 2018 18:35 pm
  • அ+ அ-

பெங்களூருவில் சனிக்கிழமை மாலை திடீரென பயங்கர புழுதிப் புயலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெங்களூருவில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டிய நிலையில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் திடீரென பலத்த காற்று வீசத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் புழுதி புயலாக மாறியதால் வானம் இருட்டியது. அடுத்த சில மணித்துளிகளில் பெங்களூருவின் வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை கொட்டத் தொடங்கியது. இதனால் மல்லேஸ்வரம், கிருஷ்ணராஜபுரம், பையப்பனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட சாலையோர மரங்களும், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இயேசு கிறிஸ்துவின் இறந்த தினமாக கருதப்படும் பெரிய வெள்ளி தினமான நேற்று புழுதி புயலுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். சிவாஜிநகர் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த மக்களில் சிலர் வெளியே வந்து ஆலங்கட்டி மழையில் நனைந்தவாறு பிரார்த்தனை செய்தனர். ஆலங்கட்டி மழையில் கொட்டிய பனித்துளிகளை மக்கள் கையில் எடுத்து, செல்போனில் படமெடுத்து கொண்டனர்.

இந்நிலையில் பெங்களூருவில் 50 கி.மீ. வேகத்தில் புழுதி புயல் வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடும் வெப்பம் நிலவிய நிலையில், திடீரென பெய்த மழையால் பெங்களூருவில் தட்பவெப்பம் மாறியது.


- இரா.வினோத்

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close