[X] Close

பரிதவித்த கைக்குழந்தை பசி தீர்த்த கான்ஸ்டபிள்!- குவியும் பாராட்டு


hyderabad-cop-breastfeeds-2-month-old-abandoned-baby-gets-awarded

  • பாரதி ஆனந்த்
  • Posted: 01 Jan, 2019 12:18 pm
  • அ+ அ-

ஹைதராபாத்தில் தாயால் கைவிடப்பட்ட 2 மாத கைக்குழந்தையின் பசியை கான்ஸ்டபிள் ஒருவர் பாலூட்டி போக்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பிரியங்கா, போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறார். இவரது கணவர் ரவீந்தரும் காவலரே. இந்நிலையில், ரவீந்தர் திடீரென பிரியங்காவை தொலைபேசியில் அழைத்து 2 மாத கைக்குழந்தை ஒன்று பசியில் தவிப்பதாகக் கூறியுள்ளார்.

உடனே ஒரு காரை புக் செய்த பிரியங்கா, அப்சல்கஞ்ச் காவல் நிலையத்துக்குச் சென்றார். அங்குதான் அந்தக் குழந்தை இருந்தது. பசியில் துடிதுடி அழுது கொண்டிருந்தது குழந்தை. பிரியங்காவும் ஒரு கைக்குழந்தையின் தாய் என்பதால் பசியில் அழுத குழந்தையை தூக்கி தாய்ப்பால் புகட்டினார். குழந்தை சற்று நேரத்தில் நிம்மதியடைந்து அழுகையை நிறுத்தியது.

அந்தப் பெண் குழந்தையை ஓஸ்மானியா மருத்துவமனை அருகே போலீஸார் கண்டெடுத்துள்ளனர். பின்னர் நடந்த தேடுதலில் குழந்தையின் தாயைக் கண்டுபிடித்து போலீஸார் ஒப்படைத்தனர்.

கைக்குழந்தையின் பசியைப் போக்கிய பிரியங்காவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஹைதராபாத் போலீஸ் உயரதிகாரிகளு பிரியங்காவை வாழ்த்தி பாராட்டினர். துரிதமாக செயல்பட்ட காவல் தம்பதிக்கு பரிசும் வழங்கப்பட்டது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close