[X] Close

10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.3,000 உதவி தொகை: மக்களவையில் பாஜக எம்.பி. யோசனை


rs-3-000-per-month-for-10-crore-poor-families

  • kamadenu
  • Posted: 01 Jan, 2019 10:52 am
  • அ+ அ-

வறுமையை ஒழிக்க நாடு முழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு அரசு சார்பில் மாதம் ரூ.3,000 உதவித் தொகை வழங்கலாம் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே யோசனை தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று அவர் பேசியதாவது: அரசு நலத்திட்டங்களில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக போலி பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர். அரசுக்கு ரூ.70,000 கோடி வரை மிச்சமாகியுள்ளது.

நாட்டில் வறுமையை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளைப் போன்று இந்தியாவிலும் ஏழை குடும்பங்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கலாம். அதன்படி நாடு முழுவதும் சுமார் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக மூத்த எம்.பி.யின் யோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close