[X] Close

வேற்றுகிரகவாசியைப் பார்த்தேன்!- பிரதமருக்கு பகீர் இமெயில் அனுப்பிய புனேவாசி


pune-man-thought-he-saw-alien-object-outside-his-home-writes-to-pm

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Dec, 2018 12:44 pm
  • அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 47 வயது நபர் ஒருவர் பிரதமருக்கு மோடிக்கு பகீர் இமெயில் ஒன்றை அனுப்பி அதிகார வட்டாரத்தை பதற்றப்பட வைத்திருக்கிறார்.

தான் தனது வீட்டினருகே வேற்றுகிரகவாசியைப் பார்த்ததாக குறிப்பிட்ட அந்த நபர் அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் அலுவலகம் உடனே அந்த இமெயிலை மகாராஷ்டிரா அரசுக்கு ஃபார்வர்ட் செய்ய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில் இமெயில் அனுப்பியவர் மனநிலை சரியில்லாத நபர் என்பது தெரியவந்தது.

இது குறித்து விசாரணைக் குழுவில் இருந்த அதிகாரி, "அந்த நபருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. 
இதனையடுத்து அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னதாக தனது வீட்டிற்கு வெளியே உள்ள மரங்கள் மீது விழுந்த வெளிச்சத்தைப் பார்த்து அது வேற்று கிரக பொருளில் இருந்து வந்ததாக அவராகவே கருதியுள்ளார். இதையே அவர் பிரதமருக்கு தான் வேற்றுகிரகவாசியைப் பார்த்ததாகவும் மெயில் அனுப்பியிருக்கிறார்.

அவர் பிரதமர் அலுவலகத்துக்கு இப்படி ஒரு இமெயில் அனுப்பியது அவரது குடும்பத்தினருக்கே தெரியவில்லை" என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close