“நான் மம்தாவை நம்பவில்லை; அவர் பாஜகவை ஆதரிக்கலாம்” - ஆதிர் ரஞ்சன் சவுத்திரி


எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்தவர் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தில்திரிணமூல் - காங்கிரஸ் இடையே தொகுதிபங்கீடு விஷயத்தில் உடன்பாடு ஏற்படாததால், திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக மம்தா அறிவித்தார். ஆனால், இண்டியா கூட்டணியில் இருந்து அவர் வெளியேறவில்லை.

மேற்குவங்கத்தில் தற்போது 5-ம் கட்ட மக்களவை தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க திரிணமூல் காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘‘ மேற்குவங்கத்தில் கூட்டணியை முறித்தவர் மம்தா பானர்ஜி. அவரை நான் நம்பவில்லை. அவர் ஏற்கனவே இன்னொரு அணிக்கு (பாஜக) ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறார்’’ என்றார்.