[X] Close

கிம்மைப் போல் சர்வாதிகாரம் செய்கிறார் மம்தா!- பாஜக தாக்கு


mamata-is-like-kim-bjp

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Dec, 2018 16:52 pm
  • அ+ அ-

மேற்குவங்கத்தில் ரத யாத்திரை நடத்த பாஜகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கும் பாஜக மம்தா பானர்ஜியை வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளது.

மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கிம் ஜோங் உன் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்ற பெயரில் மேற்கு வங்க மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் ரத யாத்திரைகளை நடத்துவதற்கு பாஜக தலைவர் அமித் ஷா திட்டமிட்டார். 

முதல் யாத்திரை கூச்பெஹார் மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் பாஜக ரத யாத்திரைக்கு மாநில அரசு அனுமதி மறுத்தது.

இதனை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றமோ மாநில அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. 

இந்நிலையில், ரத யாத்திரைய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பாஜக இன்று (திங்கள்கிழமை) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த கிரிராஜ் சிங், "இந்தியாவிலேயே ஜனநாயகம் இல்லாத ஒரே மாநிலம் மேற்குவங்கம்தான். அங்கு மம்தா பானர்ஜி வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னைப்போல் சர்வாதிகாரம் செய்து கொண்டிருக்கிறார்.

அவருக்கு எதிராக குரலை எழுப்புபவர்களைக் கொல்கிறார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் யாத்திரை நடத்தலாம். எங்களை யாரும் தடுக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தில் எங்கள் பக்கம் தீர்ப்பு வரும்" என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close