415 தொகுதிகளில் பாஜக அணிக்கு வெற்றி - ‘டுடேஸ் சாணக்கியா’ கணிப்பு


கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது, பாஜக 300-314 இடங்கள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-364 இடங்கள், காங்கிரஸ் 55-64 இடங்கள், அந்த கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 95-104 இடங்களை கைப்பற்றும் என்று ‘டுடேஸ் சாணக்கியா’ ஊடக நிறுவனம் துல்லியமாக கணித்து கூறியது.

இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலையொட்டி டுடேஸ் சாணக்கியா நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட கருத்துக் கணிப்பில், ‘பாஜக 335 - 350 இடங்கள், பாஜக கூட்டணி 400 - 415 இடங்களை கைப்பற்றும். காங்கிரஸுக்கு 50 - 61, இண்டியா கூட்டணிக்கு 107 - 118 இடங்கள் கிடைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இண்டியா கூட்டணிக்கு 29-34 இடங்கள், பாஜக கூட்டணிக்கு 10-14 இடங்கள், அதிமுக கூட்டணிக்கு 0-2 இடம் கிடைக்கும் என்று கணித்துள்ளது.

பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம்: