[X] Close

சேவல் சண்டை தெரியும்.. சேவலுக்காக இரு மாநிலங்கள் சண்டை போட்டுக்கொள்வது தெரியுமா?


mp-govt-launches-kadaknath-app-to-market-rare-chicken-breed

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 Mar, 2018 11:07 am
  • அ+ அ-

கடக்நாத் 'Kadaknath' இது ஒருவகை கோழி இனத்தின் பெயர். இந்தக் கோழி இனம் எங்கள் மாநிலத்துக்குத்தான் சொந்தம் என்று மத்தியப் பிரதேசமும் சத்தீஸ்கரும் போட்டா போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தப் போட்டியில் மத்தியப் பிரதேச மாநிலம் ஒருபடி மேலே சென்று ஒரு மொபைல் செயலியை உருவாக்கி இருக்கிறது. அதற்கு 'எம்.பி. கடக்நாத்’ (MP Kadaknath) எனப் பெயரிட்டுள்ளது. இதன் மூலம் இந்த வகைக் கோழிகளை வளர்ப்பவர்கள் தகவல்களைப் பறிமாறிக்கொள்ள முடியும்.

மேலும், எந்தெந்த கூட்டுறவுச் சங்கங்களில் இவ்வகை கோழி கிடைக்கும் என்பதையும் இச்செயலி மூலம் தெரிந்துகொள்ள முடியும். கடக்நாத் கோழியின் இறைச்சி கருமையாக இருக்கும். இதில் ஊட்டச்சத்தும் மருத்துவ குணமும் அதிகமாம். அதனாலேயே இந்த வகை கோழிக்கு மவுசு அதிகமாக இருக்கிறது.

இது குறித்து மத்தியப் பிரதேச மாநில கூட்டுறவு அமைச்சர் விஸ்வாஸ் சாரங், "இந்த செயலி மூலம் அலிராஜ்பூர், ஜபூவா மாவட்டங்களின் 21 கூட்டுறவுச் சங்கங்களைச் சேர்ந்த 430 உறுப்பினர்கள் பயனடைய முடியும். மேலும் சில கூட்டுறவு சங்கங்களைச் சேர்க்கும் பணியும் நடந்து வருகிறது" என்றார். 

-பிடிஐ

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close