[X] Close
 

கேரளாவில் புதிய புரட்சி: சாதி, மதத்தை உதறித்தள்ளிய ஒரு லட்சம் குழந்தைகள்


have-no-religion-or-caste-say-1-24-lakh-kerala-students

  • போத்திராஜ்
  • Posted: 28 Mar, 2018 20:34 pm
  • அ+ அ-

கேரள மாநிலத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளி சேர்ப்பின்போது, சாதி, மதத்தைக் குறிப்பிடாமல் சேர்ந்துள்ளனர்

இது குறித்து கேரள சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் சி ரவிந்திரநாத் கூறியதாவது:

கடந்த 2017-18ம் கல்வியாண்டில், ஒருலட்சத்து 24 ஆயிரத்து 147 குழந்தைகள் தங்களின் கல்வி, சாதி குறித்து குறிப்பிடாமல் பள்ளியில் சேர்ந்துள்ளனர். சாதி, மதம் குறிப்பிடும் சேர்க்கைப்  படிவத்தில், அவர்கள் எதையும் குறிப்பிடவில்லை.

ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் மதத்தையும், சாதியையும் குறிப்பிட விரும்பவில்லை. மேலும், 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளில் 275 பேரும், 12-ம் வகுப்பில் 239 மாணவ,மாணவிகளும் தங்களின் சாதி, மதத்தின் பெயரை குறிப்பிடவில்லை.

பெரும்பாலும், தங்களின் பிள்ளைகளை தொடக்கப்பள்ளிகளில் சேர்க்கவரும் இளம் பெற்றோர்கள் தங்களின் சாதி, மதத்தின் அடையாளத்தை வெளியில் கூற விரும்பவில்லை. இதனால் சேர்க்கை படிவத்தில் அந்த இரு இடங்களையும் நிரப்பாமல் விடுகின்றனர்.

சமீபகாலமாக இளம் பெற்றோர் மத்தியில் வளர்ந்துவரும் சாதி, மத ரீதியான பாகுபாடு இல்லாத்தன்மை அனைவராலும் பாரட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிவரும் சமூக ஆர்வலர் சன்னி கே கபிகாட் கூறுகையில், கேரளாவில் சாதி பாகுபாடு என்பது பல இடங்களில் இருந்து வருகிறது. சமீபத்தில் கொல்லப்பட்ட பழங்குடியின இளைஞர் மது அதற்கு உதாரணம். இன்னும் மக்கள் மத்தியில் நாயர், நம்பூதரி,  உள்ளிட்ட சாதி குறித்த பெயர்கள் இடம் பெறுவதை காணலாம். அப்படி இருக்கும் சூழலில் குழந்தைகளுக்கு சாதி,மதம் குறிப்பிடாமல் பள்ளியில் சேர்த்து வருவது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்தார். .

தொடர்புடைய செய்திகள்

 



MGR - Kindle Edition


[X] Close