[X] Close

பிரசாதத்தில் விஷம் கலப்பு; பூசாரி உட்பட 6 பேர் கைது


poison-temple

  • kamadenu
  • Posted: 20 Dec, 2018 10:41 am
  • அ+ அ-

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூரை அடுத்துள்ள சுல்வாடி கிராமத்தில் கிச்சுகட்டி மாரம்மா கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 15-ம் தேதி நடந்த பூமி பூஜையின் போது பக்தர்களுக்கு பிரசாதமாக தக்காளி சாதம் வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை சாப்பிட்ட 15 பேர் இறந்தனர். சாம்ராஜ்நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் கோயில் நிர்வாகத்தை கைப்பற்று வதில் சின்னப்பி, மாதேஷ் ஆகிய இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதன் பின்னணியில் சாலூர் மடம் மற்றும் மாதேஷ்வர மலை மடமும் இருந்துள்ளன. தமிழகத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒரு வரின் ஆலோசனையின் பேரில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் சாம்ராஜ்நகர் போலீஸார் கோயில் பூசாரி இம்மடி மகாதேவ சுவாமி, கோயில் அறக்கட்டளை தலை வர் தொட்டய்யா, மேலாளர் மாதேஷா, அவரது மனைவி அம்பிகா, சின்னப்பி, சமையலர் புட்டசாமி ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து சாம்ராஜ்நகர் போலீஸார் கூறு கையில், ‘‘கோயில் நிலம் மற்றும் வருமானத்தை கைப்பற்று வதற்காக சாலூர் மடத்துக்கும், மாதேஸ்வர மடத்துக்கும் இடையே போட்டி இருந்துள்ளது. இந்த மடங்களின் ஆதரவைப் பெற்ற சின்னப்பி மற்றும் மாதேஷ் அதிகாரத்தை பெறுவதற்காக மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் மாதேஷ் குழு முந்திக்கொண்டு கலசம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சின்னப்பி குழு பூசாரி இம்மடி மகாதேவ சுவாமி, தொட்டய்யா உள்ளிட்டோருடன் சேர்ந்து பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்துள்ளனர். இதில் சந்தேகம் வராமல் இருப்பதற்காக சமையலர் புட்டசாமி தன் 12 வயதான ஊனமுற்ற மகள் அனிதாவுக்கு உணவு கொடுத்துள் ளார்.

அந்த உணவை சாப்பிட்ட அனிதா உயிரிழந்துள்ளார். இதே போல புட்டசாமி, மாதேஷா ஆகிய இருவரும் குறைந்த அளவில் அந்த உணவை சாப்பிட்டுள்ளனர். மைசூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக் கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது''என்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close