[X] Close

அரசியலில் இனி ராகுல் பப்பு இல்லை அப்பா.. சொல்கிறார் மத்திய அமைச்சர்


rahul-no-more-pappu-he-is-pappa-now

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Dec, 2018 11:43 am
  • அ+ அ-

அரசியலில் இனி ராகுல் காந்தி பப்பு இல்லை அப்பாவாகிட்டார் என மத்திய அமைச்சரும் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அதாவாலே தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என பாஜகவசமிருந்த 3 மாநிலங்களையும் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், ராம்தாஸ் அதாவாலே, "ராகுல் காந்தியை பப்பு என்று கேலியாக அழைத்தவர்கள் எல்லாம் அரசியலில் இப்போது அவர் அப்பாவாகிட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நிஜ வாழ்விலும் அப்பாவாக ராகுல் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன். மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றிருப்பதால் ராகுல் இப்போதாவது திருமணம் செய்து கொள்ளலாம்.

இந்த தேர்தல் தோல்விக்கும் பிரதமர் மோடிக்கும் சம்பந்தமில்லை. இது பாஜகவின் தோல்வியே தவிர பிரதமரின் தோல்வி அல்ல" எனக் கூறியுள்ளார்.

ராஜாஸ்தானில் 99 இடங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் 114 இடங்களிலும், சத்தீஸ்கரில் 68 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close