[X] Close

ரஃபேல் வழக்கு தீர்ப்பை ராகுல் ஏற்க வேண்டும்...


rafale-deal-sc-order

  • kamadenu
  • Posted: 17 Dec, 2018 10:38 am
  • அ+ அ-

ர ஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் எவ்வித முறைகேடும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக ‘ஸ்வராஜ்யா’ இணையதளத்தில் வெளியாகி உள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப்படைக்காக 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்த விவகாரத்தில் எவ்வித முறைகேடும் நடக்க வில்லை என தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதேநேரம், காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் விவகாரத்தை மேலும் பூதாகரமாக்க பார்க்கிறார். ராகுல் மட்டுமல்லாமல் பிற எதிர்க்கட்சிகளும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கொச்சைப்படுத்த முயற்சிக்கின்றன.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ரஃபேல் போர் விமான விலை விவரம் குறித்து நாடாளுமன்ற பொது கணக்கு குழுவிடம் (பிஏசி) மத்திய அரசு ஆலோசனை நடத்தியதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிஏசிக்கு இந்த விலை விவரம் கிடைக்கவே இல்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பொய் கூறி உள்ளது” என்றார்.

ஆனால் உண்மை என்னவென்றால், ரஃபேல் விமான விலை விவரம் அடங்கிய அறிக்கை மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளரிடம் (சிஏஜி) வழங்கப்பட் டுள்ளது. அந்த அறிக்கையை பிஏசி ஆய்வு செய்தது என்றுதான் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை மீண்டும் கூறி வருகின்றனர். இந்த ஒப்பந்தம் குறித்து நீதிபதிகள் முழுமை யாக ஆராய்ந்த பிறகே தீர்ப்பு வழங்கி உள்ளனர் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) ஆட்சியில் இருந்தது. அப்போது, பிரான்ஸ் அரசுடன் ரகசிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் அடிப்படையில்தான் ரஃபேல் போர் விமான விலையை வெளிப் படையாக தெரிவிக்கவில்லை. அப்படி இருந்தபோதிலும், எதிர்க்கட்சியினரின் குற்றச் சாட்டில் உண்மை இல்லை என்பதை நிரூபிக்க, விலை விவரத்தை உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி திருடன் என்று குற்றம்சாட்டுகிறார். பிரதமர் பதவியை எதிர்நோக்கி உள்ள ஒரு முக்கிய கட்சியின் தலைவர் இவ்வாறு பேசுவது சரியல்ல. ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி மீது போஃபர்ஸ் பீரங்கி ஊழல் புகார் எழுந்தது. ஆனால் அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த வி.பி.சிங், அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி உள்ளிட்ட எவருமே ராகுல் கூறுவது போல திருடன் என்று ராஜீவை குறிப்பிடவில்லை என்பதை நினைவுகூர வேண்டும்.

பாதுகாப்பு தளவாட கொள்முதல் தொடர்பாக புதிய நடைமுறை 2013-ல் உருவாக்கப்பட்டது. இதன்படி, ரஃபேல் போர் விமான தயாரிப்புக்காக, தஸ்ஸோ நிறுவனம் அனில் அம்பானி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. அனில் அம்பானி நிறுவனத்தை தஸ்ஸோ நிறுவனம்தான் தேர்ந்தெடுத்தது. இதில் மத்திய அரசுக்கு பங்கு இல்லை. இந்நிலையில், பிரதமர் மோடியையும் அனில் அம்பானியையும் ராகுல் காந்தி இணைத்து பேசுகிறார்.

உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது. ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நற்சான்று வழங்கியபோதிலும், ராகுல் காந்தி தேவையில்லாமல் பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோருகிறார். இதற்கு முன்பு போஃபர்ஸ் விவகாரத்தில் ஜேபிசி விசாரணை நடைபெற்றது. அதில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியே ஜேபிசியும் மோடிக்கு நற்சான்று வழங்கினாலும் காங்கிரஸ் கட்சியினர் அதையும் ஏற்க மாட்டார்கள்.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான கற்பனைக்கும் பொதுமக்களின் பொறுமைக் கும் ஒரு எல்லை உள்ளது என்பதை ராகுல் காந்தி உணர வேண்டும். எனவே, ரஃபேல் தொடர்பான தீர்ப்பை அவர்கள் முழுமையாக படிக்க வேண்டும். இதில் முறைகேடு நடக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close