[X] Close

சத்தீஸ்கரில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி:  15 ஆண்டு கால பாஜக ஆட்சி முடிவுக்கு வந்தது


congress-victory

  • kamadenu
  • Posted: 12 Dec, 2018 10:47 am
  • அ+ அ-

ராய்ப்பூர்

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்த லில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் பான்மை பலத்துடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாஜக ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் மாதம் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங் களாக தேர்தல் நடைபெற்றது. நக்சல் ஆதிக்கம் நிறைந்த மாநிலம் என்பதால் பாதுகாப்பு காரணங் களுக்காக இவ்வாறு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.

சத்தீஸ்கர் தேர்தலை பொறுத் தவரை, ஆளும் பாஜகவுக்கும், பிரதான எதிர்க்கட்சியான காங்கி ரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது.

அங்கு 15 ஆண்டுகளாக ஆட்சி யில் இருக்கும் பாஜகவை இந்தத் தேர்தலில் எப்படியாவது அகற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், ஆட்சியை தக்க வைக்கும் கட்டாயத்தில் பாஜகவும் தீவிர களப்பணியாற்றின.

பகுஜன் சமாஜ் கட்சியானது, அஜித் ஜோகியின் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது.

பாஜக சார்பில் முதல்வர் வேட் பாளராக அம்மாநில முதல்வரான ரமண் சிங் அறிவிக்கப்பட்டார். அதேசமயத்தில், காங்கிரஸ் எந்த வொரு தலைவரையும் முன்னிறுத் தாமல் தேர்தலைச் சந்தித்தது.

இந்நிலையில், சத்தீஸ்கர் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி நேற்று தொடங்கியது. இதில், பல்வேறு தொகுதிகளில் ஆரம்பம் முதலாகவே காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது.

இதனைத் தொடர்ந்து, முழுமை யான தேர்தல் முடிவுகள் இரவு வெளியாகியது. இதில், மொத்த முள்ள 90 தொகுதிகளில் 68 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தனிப் பெரும்பான்மைக்கு 46 தொகுதிகள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் 68 தொகுதி களில் வெற்றி வாகை சூடியுள்ளது. பாஜக சார்பில் ராஜ்நந்த்கான் தொகுதியில் போட்டியிட்ட முதல் வர் ரமண் சிங், 27,079 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் பாஜக வெறும் 16 தொகுதி களில் மட்டுமே வெற்றி பெற்றுள் ளது. பகுஜன் சமாஜ் கூட்டணி 6 தொகுதிகளைக் கைப்பற்றியது.

இத்தேர்தல் வெற்றியின் மூலம் சத்தீஸ்கரில் விரைவில் காங்கிரஸ் ஆட்சி அமையவுள்ளது. இதனிடையே, அம்மாநிலத்தின் புதிய முதல்வரை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்யும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

முதல்வர் ரமண் சிங் ராஜினாமா

இதனிடையே, சத்தீஸ்கரில் பாஜக தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் ரமண் சிங், தமது பதவியை ராஜினாமா செய்துள் ளார். அதன் பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

சத்தீஸ்கர் மக்கள் தீர்ப்புக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். இந்த தேர்தல் தோல்விக்கு நானே முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கி றேன். இனி வலுவான எதிர்க்கட்சி யாக இருந்து மாநிலத்தின் வளர்ச் சிக்காக உழைப்போம். சட்டப் பேரவைத் தேர்தல் என்பது மாநில விவகாரங்களை மையமாக வைத்து தீர்மானிக்கப்படுவது ஆகும். இந்த முடிவுகளை வைத்து மக்களவைத் தேர்தலை கணிக்கக் கூடாது என அவர் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close